"பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவால் இந்திய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு"
"வருவாய் இழப்பு ஒரு சூட்சும வார்த்தை" உங்களுக்கு புரியவில்லை என்றால் மேற்கொண்டு படிக்கவும். "வருவாய் இழப்பு" என்பது வேறு "நட்டம்" என்பது வேறு.
100/- ரூபாய் அடக்கம் உள்ள பொருளை 90/- ரூபாய்க்கு விற்றால் நட்டம்,
100/- ரூபாய் பொருளை ரூ. 110/- க்கு விற்றால் லாபம்.
ரூ.100/-மதிப்புள்ள பொருளை அதே விலைக்கே விற்றால் வருவாய் இழப்பு!!!(பக்கத்துக்கு கடை வியாபாரி போல ரூ.110 க்கு விற்றல் 10ருபாய் இலாபம் கிடைக்கும், 100 க்கு விற்கும் பொழுது 10ருபாய் இழப்பு ஏற்படுகிறது - வருவாய் இழப்பு எனும் வார்த்தைக்கு இந்திய எண்ணை நிறுவனங்கள் கொடுக்கு விளக்கம் ). அடக்க விலை என்பதே அதன் உற்பத்தி செலவுகள், மற்றபல செலவுகள், உற்பத்தியாளர்கள் சம்பளம், ஏற்று கூலி, இறக்கு கூலி ஆகியவற்றை உள்ளடக்கியதே, மேலும் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் இலாப நோக்கற்றவை என்றும் கூறப்படுகிறது, ஆகையால் தான் அவர்கள் மிக தெளிவாக நட்டம் என்று சொல்லாமல் வருவாய் இழப்பு என்று சொல்கின்றனர்.
பெட்ரோல் நிறுவனங்களுக்கு எந்த வகையில் வருவாய் இழப்பு?
(1) மூலப்பொருளான கச்சா எண்ணையை இலாப நோக்கற்ற இந்திய எண்ணை நிறுவனங்கள் நேரடியாக வாங்கி இறக்குமதி செய்து அதை சுத்திகரிப்பு செய்து பெட்ரோலாகவும், டீசலாகவும், மண்எண்ணையாகவும் , சமையல் எரிவாயுவாகவும் இந்திய சந்தைகளில் விற்கப்படுகிறது, அப்படி செய்யாமல் (2)கச்சா எண்ணையை விற்கும் நிறுவனங்களிடம் இருந்தே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தும் பொழுது அதன் விலை அதிகமாக இருக்கும். இந்த இரண்டாவது முறையை தான் பலநாடுகள் கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
இதை காரணம் காட்டி, இந்திய இலாப நோக்கற்ற எண்ணை நிறுவனங்கள், முதலில் கூறிய (1)வழியில் எண்ணையை நாமே சுத்திகரிப்பு செய்து பெட்ரோலாகவும் டீசலாகவும், மண்என்னையாகவும், சமையல் எரிவாயுவாகவும் விற்கும் பொழுது இரண்டாம் (2)முறையில் விலையை நியமிக்கவேண்டுமாம். அவ்வாறு நியமிக்காத தருணத்தில் நமது இலாப நோக்கற்ற இந்திய நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதாம். இதன் பொருட்டே இந்திய எண்ணை நிறுவனங்கள் விலை ஏற்றத்தை நோக்கி இந்தியை அரசை நிபந்தித்து வருகிறது. மக்கள் மீது பெரும் அக்கறை கொண்ட அரசும் பெட்ரோல் விலை ஏற்றத்துக்காக தக்க தருணத்தை எதிர்நோக்கியுள்ளது.
(பெட்ரோலிய பொருட்களுக்காக ஏற்கனவே ஏறத்தாழ 45% வரியை ஏழைகள் அற்ற இந்திய திருநாட்டு மக்கள் செலுத்திக்கொண்டு இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது).
இந்திய அரசின் பெட்ரோலிய பொருளுக்கான 45% வரி என்பதே ஒரு அபத்தம், போதாக்குறைக்கு இலாப நோக்கற்ற இந்திய எண்ணை நிறுவனம் வருவாய் இழப்பு என்ற வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி பெரும் இலாபம் ஈட்ட முற்படுகிறது என்பதை நாம் அறியவேண்டும்.
"ஆகவே தாங்கள் அறிய வேண்டியது என்னவென்றால் வருவாய் இழப்பு என்பது வேறு நட்டம் என்பது வேறு".
டீசலுக்கு மாற்று எரிபொருள்:
டீசலுக்கு மாற்று எரிபொருள் எனப்படும் எத்தனால் உற்பத்தியை பெருக்க இந்திய அரசிடம் வழிகளும் வளங்களும் இருந்தும் அதை பாராமுகம் காட்டுகிறது.
எத்தனால் உற்பத்தியை மேற்கொண்டால்
மேற்கொண்டு படிக்க

டீசல் விலையை குறைக்க முடியும்.
கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் வள்ளுவனின் வார்த்தைக்கிணங்க சில பல அரசியல் இலாப நட்ட நோக்கிற்காக எத்தனாலை கண்டுகொள்ளவில்லை.மேற்கொண்டு படிக்க
0 comments:
Post a Comment