Saturday, May 26, 2012

MEN IN BLACK - 3 - ஹாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://4.bp.blogspot.com/-AvmhTlJAvLo/T1cgK81xLhI/AAAAAAAAMUw/m_lv-4KyrZs/s1600/men_in_black_3+(+iii+).jpg 

வில் ஸ்மித் எல்லாருக்கும் பிடிச்ச ஆக்‌ஷன் ஹீரோ.. லொட ,லொடன்னு காமெடியா அவர் பேசிட்டே பண்ற அதிரடி ஆக்‌ஷன்கள் அசத்த வைக்கும்.. மென் இன் பிளாக் ஆல்ரெடி 2 பார்ட்ல வந்த அதே டைப் ஆக்‌ஷன் கதை தான் இதுவும்.. 


போரஸ் அப்டினு ஒரு வில்லன் .. நம்ம ராகுல் மாதிரி.. அவனை பிடிச்சு ஜெயில்ல போட்டுடறாங்க .. 40 வருசமா அவன் ஜெயில்ல இருக்கான். அப்போ எல்லாம் எதும் செய்யலை.. தப்பிக்க முயற்சி பண்ணலை.. 40 வருஷம் போய் காலம் போன காலத்துல தப்பிச்சு உலகத்தை அழிக்க கிளம்பறான்.. அவன் ஒரு ஏலியன்ஸ் .. அதாவது வேற்றுக்கிரக வாசி..

 சாதா தமிழ்ப்படம்னா ஹீரோ என்ன பண்ணுவாரு அவனை துரத்தி உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்துவாரு/ ஆனா இது ஹாலிவுட் படம்.. அதனால கொஞ்சம் ரிச்சா காதுல பூ சுத்தனும்..( அந்த ரிச்சா இல்லை.. )அதனால அவங்க என்ன பண்றாங்கன்னா  கடந்த காலத்துல போய் அவனை அழிக்க ட்ரை பண்றாங்க.. 

 அதாவது நிகழ்காலத்துல அவனை தேடி கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கறதை விட கடந்த காலத்துல போனா ஈசியா கொன்னுடலாம்.. அதுவும் இல்லாம இன்னொரு சாவு பற்றியும் துப்பு கண்டு பிடிக்க வேண்டி இருக்கு,...  ஒரே சைட்ல 2 ஃபிகரு.. அதாவது ஒரே கல்லுல 2 மாங்கா.. 

 ஏஜெண்ட் ஜே, ஏஜெண்ட் கே  2 பேரும்  எப்படி இணைஞ்சு இந்த வேலையை செய்யறாங்க என்பதை சரியா 108 நிமிஷத்துல ஜாலியா , விறு விறுப்பா சொல்லி இருக்காங்க .. 


வில் ஸ்மித் எப்பவும் போல சுறுசுறு நடிப்பு துறு துறு பேச்சு.. அழகிய டிரஸ்சிங்க் சென்ஸ்.. ஜைஜாண்டிக் பாடி லாங்குவேஜ்.. குட் பர்ஃபாமென்ஸ்.. கீப் இட் அப்..



படத்துல ஹீரோயின் இல்லாதது பெரிய குறை ( படத்துக்கோ, கதைக்கோ அல்ல என்னை மாதிரி யூத்ங்களுக்கு ஹி ஹி )

Tommy Lee Jones இன்னொரு ஏஜெண்ட்டா நடிச்சிருக்காரு.. அவர் ஆள் முகம் பாறை மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாத சுபாவம் செம கலக்கல் .



http://www.redcarpetdivas.com/images/nicole-scherzinger/nicole-scherzinger-men-in-black-3-premiere.jpg.


 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவ ஆபத்தானவ இல்லை, இவ அழகுல மயங்குனாத்தான் ஆபத்து.. 


2.  வெட்டியாத்தானே நிக்கறே.. இந்த கேக்கை வெட்டேன்?


3.. நீ ஜெயிச்சுடுவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? 

 வெற்றிக்கு தோல்வியே கிடையாது.. 


4. ஃபிளைட்ல போறப்ப செல் ஃபோனை எல்லாரும் ஆஃப் பண்ணிடுங்க.. அப்படி பண்ணலைன்னா செல் ஃபோன் ஆன் ல இருக்கும், ஆனா நீங்க எல்லாம் ஆஃப் ஆகிடுவீங்க..


5. என்னோட இரங்கல் கூட்டத்துலயாவது ஒழுங்கா பேசுவியா?

செத்தாலும் அப்படி பேச மாட்டேன்



6. எனக்கு கடந்த கால கருவி வேணும்.. 

 எதுக்கு?

 கடந்த காலத்துல என் கையை வெட்டுனவனை பார்த்து அவன் என் கையை வெட்டும் முன்னே அவன் தலையை வெட்டனும்.. 


7. என்னை அடிக்கடி தெளீவா குழப்பறதே உன் வேலையாப்போச்சு.. 

8.  டேய் கண்ணா .. 40 வருஷ ஜெயில் தண்டனை எப்படி இருந்தது?


நீ அனுபவிக்கப்போறதை விட சுமாரா தான் இருந்தது.. 


9.  பல வருஷங்களூக்கு முன்பே அவனை ஜெயில்ல போட்டது தப்போன்னு இப்போத்தோணுது
\
 ஏன்? 

 அவனை கொன்னிருக்கனும்.. 


10.  ஏய்யா,.. அவனை யூத்தான என்னாலயே சமாளிக்க முடியலையே.. வயசான நீ எப்படி சமாளிக்கப்போறே?


11.  நீ ஓவரா வாய் பேசறே.. உன்னை 2 வாரம் சஸ்பெண்ட் பண்றேன்

 போய்யா லூசு


4  வாரம்


12. மம்மி.. அந்த அங்க்கிள் என்கிட்டே இருந்து சாக்லெட் ஃபேவரை பிடுங்கிட்டாரு

 ம் ம் 

 அது கூட தேவலை, ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலை.. 


13. நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை.. 5 அடி தள்ளியே நில்லுங்க.. குரல் வளையை  கடிச்சுடப்போறேன்


14.  ஏஜெண்ட் கே எப்படி இருப்பாரு?

 அவர் ரொம்ப அழகா இருப்பாரு.. ஆனா அவர் சிரிச்சா ரொம்ப கேவலமா இருக்கும்


15. எதுக்காக இப்போ சிரிச்சே?

 ஜோக் அடிச்சா சிரிப்பேன்.. இப்போ நீ சொன்னது ஜோக் தானே? 



http://www.etunlimited.com/wp-content/uploads/2012/04/MIB-3-WALLPAPER-3.jpg

16.  காஃபி ஏன் மண் மாதிரி இருக்கு?

 ஏன்னா காஃபிக்கொட்டை மண்ல இருந்துதானே விளையுது?



17. ஸாரி சார்.. சம்பளம் அதிகமா வாங்கற  ஹை கிளாஸ் ஆஃபீசர்ங்க கிட்டே தான் அதெல்லாம் சொல்லுவோம்.. உங்க கிட்டே சொல்ல முடியாது.. நீங்க லோயர் கிரேடு 

 அப்போ என் சம்பளத்தை உயர்த்திடுங்க ஹி ஹி


18. என்னை மாதிரி கறுப்பா இருக்கறவங்க  கலரா கார் ஓட்டிட்டு வந்தா அது திருட்டுக்காரா?


 ஏன் அப்படி சொல்றீங்க? இது திருட்டுக்கார் தான்.. 

 ஆனா அதுக்கும் என் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை



19. எதுக்காக என் கிட்டே கன்னை காட்டறீங்க? என் கிட்டே புல்லட்ஸ் ஏதும் ஸ்டாக் இல்லை.. 

 புல்லட் நீயே வெச்சுக்கோ,.,. காட்ட வர்லை மிரட்ட வந்திருக்கோம்


20. இந்த பொருள் சரியா வேலை செய்யுமா?ன்னு செக் பண்ணீயாச்சா?


 நீ உயிரோட இருந்தா சரியா வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம் ஹி ஹி 


21. எனக்கு பழசெல்லாம் மறந்துடுச்சு.. நான் இப்போ குழந்தை மாதிரி

 அதை எப்படி நாங்க நம்பறது?

 அப்பா.. நான் பூமில இருக்கேன்.. என்னை ஜாமீன்ல கூட்டிட்டு போங்க .. 


22.  இந்த கன்ஸ், வெப்பன்ஸ் எல்லாம் ஏது?

 தேர்க்கடைல ரிங்க் போட்டு மாட்னது ஜ்ஹி ஹி


23.  நான் எல்லா லேடீசையும் ஓ-ன்னு தான் கூப்பிடுவேன் 

 யோவ்1 


 டோண்ட் மிஸ்டேக்கன் மீ..  ஓக்கேவான்னு அர்த்தம்


24.  என்னமோ ஐ டெஸ்ட்னு கூட்டிட்டு வந்திருக்கீங்க ஆனா  இது பார்த்தா நியூராலாரிஸம் போல இருக்கே.. 

 உனக்கு பல உண்மைகள் தெரிஞ்சுருக்கு 



25.  உனக்கு என்ன வயசு? 

 29


 எது? இந்த 28க்க்குப்பிறகு வருமே அதுவா?

26. அவனுக்கு 5 பரிமாணம் இருக்கு..  இருந்த இடத்துல இருந்தே 5 வெவ்வேற வடிவம் எடுத்து அவன் நினைச்சதை சாதிக்க முடியும் 


27. எங்க தாத்தா அடிக்கடி என்ன சொல்லுவாருன்னா உன்னால ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியலைன்னா ஆறப்போடு.. போய் சாப்பிடு..  அப்புறமா அது பற்றி யோசின்னு.. 


28. கசப்பான உண்மை இனிப்பான பொய்யை விட பெஸ்ட்


29. மரணத்தை தடுக்கனும்னா இன்னொரு மரணத்தால தான் அது முடியும்..


30. லேடி - ஏஜெண்ட் கே எப்படி இருக்கீங்க? 

 யோவ்.. இந்த குசலம் விசாரிக்கறது, கடலை போடறது இதெல்லாம் போய்க்கிட்டே பேசலாமே?

http://im.in.com/media/download/wallpapers/2012/May/mib3_seoulpremiere18_1024x768_420x315.jpg


வில்லனோட ஆள் தலையை தனியா கட் பண்ணி பேஸ் பால் விளையாடும் சீன் தியேட்டரில் செம கிளாப்ஸ்.. 

 ஏஜெண்ட் கே, ஏஜெண்ட் ஜே, இன்னொருத்தர் 3 பேரும் பாலத்துல நின்னு பேசிட்டு இருக்கும்போது வில்லன் பைக்ல அசுர வேகத்துல வந்து அந்த இன்னொரு ஆளை அலேக்கா தூக்கி பைக்ல உக்கார வெச்சு கடத்துவது கலக்கல் ஆக்‌ஷன் 


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங் ஷாட்ல வில்லன் தனக்கு உதவின லேடியை எதுக்கு சம்பந்தமே இல்லாம கொல்லனும்? இதுல “என்னை நம்புனது உன் தப்புன்னு பஞ்ச் டயலாக் வேற 

2. அபார சக்தி, அளப்பறிய மேஜிக் எல்லாம் தெரிஞ்ச அந்த வில்லன் 40 வருஷங்கள் ஏன் மன்மோகன் சிங்க் மாதிரி டம்மியா இருக்கனும்?

3. வில் ஸ்மித் காலக்கருவி\யோட 1969க்குப்போறாரு. க்ளைமாக்ஸ்ல ஏஜெண்ட்  கே கூட அந்த சின்னப்பையன் ( ஸ்மித்தின் சின்னப்பையன் வடிவம்) போறதை வேடிக்கை பார்த்துட்டே நிக்கறார்.. அவர் கைல காலக்கருவி இருக்கு அது 2012 உலகத்துக்கு ஒப்படைக்க வேணாமா? அதை ஏன் ஏஜெண்ட் கிட்டே அதை கொடுக்கலை?

 ஆர்ட் டைரக்‌ஷன், இசை, ஒளிப்பதிவு எல்லமே அசத்தல்..  பிரம்மாண்டம் காட்சிக்கு காட்சி.. 

0 comments:

Post a Comment