மின்சாரத்தை
சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய
எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள்
இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட இம்மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான
‘பிலிப்ஸினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
மேலும் அண்மையில் அமெரிக்க
அரசாங்கத்தினால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான
10மில்லியன் டொலர் பரிசினையும் இந்த மின்குமிழி வென்றுள்ளது. சுமார் 18
மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த மின்குமிழியின் விலை 60 அமெரிக்க டொலர்கள் என
தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதனைப்
பயன்படுத்தும் காலத்தில் சுமார் 165 அமெரிக்க டொலர்கள் வரையான மின்சக்திச்
செலவினை சேமிக்க முடியும் என பிலிப்ஸ் தெரிவிக்கின்றது. எனினும் சில
இடங்களில் இதனை 25 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக
பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment